வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்களின்கோரிக்கைகளை தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.மேலும், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறி அரசு ஏமாற்றியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், எளிதில் நிறைவேற்றக்கூடிய பல கோரிக்கைகளையும் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி அரசு நிறைவேற்ற மறுப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.