Also Watch
Read this
ரயில் நிலையங்களில் டெலிவரி.. சோமாட்டோ புதிய ஒப்பந்தம்..
குஷியான உணவு பிரியர்கள்..
Updated: Sep 26, 2024 01:50 PM
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நாட்டின் 100 ரயில் நிலையங்களில் உள்ள ரயில் பெட்டிகளுக்குள்ளே சென்று பயணிகளுக்கு உணவு டெலிவரி செய்யும் வகையில இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செஞ்சிருக்கு...
இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரயில்வே துறை அமைஞ்சிருக்குனு சொல்லலாம்... நாட்டிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்களோட அலுவலகங்கள் செல்வதற்கும், தொலைதூர பயணத்தை மேற்கொள்வதற்காகவும், பயணிகள் ரயில்சேவையை பயன்படுத்திட்டு வராங்க..
இன்னும் சொல்லப்போனா ரயில்களில் டிக்கெட் விலை மலிவான கட்டணத்துடன் பாதுகாப்பான பயணத்தை வழங்குவதால் வசதி படைத்தவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரயில்களை அதிகம் விரும்புகின்றனர். ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் ரயில் நிலையங்கள உள்கட்டமைப்பு வசதிகள், பயணிகள் சவுகரியத்திற்கேற்ப பெட்டிகளில் புதிய புதிய வசதிகள ஏற்படுத்தி தருவது என பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருது.
இந்த நிலையில ரயில் பயணித்தின் போது விற்கப்படும் உணவு பலராலும் நிராகரிக்கப்படுவதும், உணவு கிடைக்காமல் பலநேரங்களில் தவிப்பவர்களும் உண்டு. இந்த நிலையில ரயில் பயணத்தின் போது உணவு சேவையை மேம்படுத்தும் விதமாக ரயில்வே துறையின் துணை நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி. சோமோட்டோவுடன் கை கோர்த்துர்க்கு ...
ரயில் பயணிகள் விருப்பத்திற்கேற்ப சூடான உணவு மற்றும் சிற்றுண்டி ஆர்டர் செய்தால் ரயில் பெட்டியில் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே Zomato டெலிவரி செய்யுமாம்... 100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் Zomato உணவு சேவையை வழங்க இருப்பதா சொல்லப்படுது.
ஏற்கனவே Zomato 10 லட்சம் ஆர்டர்களை ரயிலில் டெலிவரி செய்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசியுள்ள Zomato தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல், ரயில் பயணிகள் தங்கள் மொபைல் போனில் சோமாட்டோ செயலியைத் திறந்து தங்களுக்கான உணவை ஆர்டரை செஞ்சிக்லாம் எனவும் , உணவு பிஎன்ஆர் அடிப்படையில், அவர்களது இருக்கைக்கு வந்து டெலிவரி செய்யப்படும் என தெரிவிச்சிருக்காரு..
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved