முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் உத்தரவாதங்களை கடைசி நேரத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்க மறுத்தது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. செந்தில்பாலாஜியை விடுவிக்கும் முன்பு ஏகப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்தாலும், வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் மேள, தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து மலர் தூவி வரவேற்று அமர்க்களப்படுத்தினர்.