ஓலா எலக்ட்ரிக் பைக் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான புகார்கள் வந்ததை அடுத்து விளக்கம் கேட்டு பெங்களூருவை அந்த நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தாமதமான டெலிவரி, ரத்து செய்யப்பட்ட முன்பதிவுக்கான தொகையை திரும்ப வழங்காமல் இருப்பது, சர்வீஸ் செய்த பிறகு ஏற்படும் பிரச்சனை உள்ளிட்ட பல புகார்கள் வந்தன. இது குறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், புகார்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.