சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், செக் வீராங்கனை கரோலினா முச்சோவா உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.