news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இன்று தொடங்கி 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

இன்று தொடங்கி 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்

வெப்ப நிலை எப்படி?

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்

தமிழகத்தில், இன்று தொடங்கி 31ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய கூடும் என்றும் தகவல் தெரிவித்து உள்ளது.

வளி மண்டல சுழற்சி
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது;
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை மே 29ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், 30ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 29
நாளை மே 29ஆம் தேதி
தேனி
திண்டுக்கல்
நீலகிரி
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
ராணிப்பேட்டை

மே 30
30ஆம் தேதி
கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
திண்டுக்கல்
நீலகிரி
தேனி
மதுரை
விருதுநகர்

மே 31ஆம் தேதி
நீலகிரி
கோவை
தேனி
திண்டுக்கல்
ஈரோடு
நாமக்கல்
திருப்பத்தூர்
திருப்பூர்
சேலம்
திருவண்ணாமலை
கிருஷ்ணகிரி
கரூர்
திருச்சி
தஞ்சாவூர்
தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வெப்ப நிலை எப்படி?
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். 31ஆம் தேதி அதிகபட்ட வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்க வாய்ப்புள்ளது.

சென்னையில்...
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்காக...
தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்று தொடங்கி 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்

10
2 hrs 24 mins agoshare
4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved