கேரளாவில் நிகழ்ந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோட்டயம் மாவட்டம் வெட்டுக்காடு என்கிற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர், தமக்கு முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே பேருந்து வந்ததால் பிரேக் பிடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி கீழே விழுந்தது.