தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளிப் பெருட்களை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அம்பர்பேட்டையில் உள்ள அபார்ட்மெண்ட்டில் இரு வீடுகளில் இரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் 35 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனிடையே இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்மநபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.