உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவதாக அக்கட்சி எம்.எல்.ஏவே விமர்சித்திருப்பது பெரும் பேசுபொருளாகி உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜார், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தலைமைச்செயலாளர் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும், உலகிலேயே ஊழல் மிகுந்த நபர் என்றால் உத்தரபிரதேச மாநில தலைமைசெயலாளர் தான் என கடுமையாக விமர்சித்தார்.