உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். உத்தரகாண்ட்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். பின்னர் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவால் வெளியேற முடியாமல் தவித்தனர். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தங்களை மீட்க உதவிய ராணுவத்திற்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.