news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்
tv

Also Watch

tv

Read this

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்

விரைவில் பொறுப்பு - ஆனந்த் உறுதி

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

தவெகவில் விரைவில் பொறுப்பு - ஆனந்த் உறுதி
இந்த நிகழ்ச்சியின் போது, புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு தவெகவில் விரைவில் பொறுப்பு வழங்கப்படும் என்று, தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் உறுதி அளித்தார்.

50% நிறைவேறியது - ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி
தவெகவில் இணைய வந்தவர்களை வரவேற்றுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அதிமுக தொண்டர்களும் ஆதரித்ததால் தான் விஜய் முதலமைச்சர் ஆகியிருப்பதாக கூறினார். 90 சதவீத அதிமுகவினர் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று கூறியது 50 சதவீதம் நிறைவேறி இருப்பதாகவும் அதிமுகவுக்கும் தவெகவுக்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 47 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான நம்பிக்கையை பெருமளவில் சிதைத்து வருவதாக கூறப்படுகிறது.

4 எம்எல்ஏக்கள் ராஜினாமா
கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் அதிமுக வெற்றி பெறாத நிலையில், தனித்துப் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இதனால், தேர்தலை அடுத்து அதிமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். அதோடு, அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

பனையூர் அலுவலகத்தில்...
தங்கள் ஆதரவாளர்களோடு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வந்தவர்கள், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, மான்ராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசனும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Related Link
பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டீக்கடை மேலாளர், ஊழியரை தாக்கிய மர்மநபர்கள்

0
12 mins agoshare
மயிலாடுதுறை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved