Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சில ராமமூர்த்தி என்பவர் இந்திரா காந்தி என்பவர் பெயரில் வெறும் ஆர்டர் காப்பி மட்டும் போட்டுக்கொண்டு பேராம்பட்டு ஏரியில் கடந்த மூன்று தினங்களாக பட்ட பகலில் மன் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடத்தப்படும் மண்ணை அருகே உள்ள பிளாட்டுக்கு கொட்டி மலை போல குவித்து வைத்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு சென்று படம் பிடிக்கும் போது
அடுத்த நொடியே அங்கிருக்கும் ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர்களை அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஜெகன் கூறுகையில் எங்க ஊரு ஏரியில் கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் வகையில் கடந்த மூன்று தினங்களாக பட்ட பகலில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ராமமூர்த்தி என்பவர் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் மண் எடுக்கலாம் என்று கொடுக்கப்பட்ட வெறும் ஆர்டர் காப்பியை மட்டும் வைத்து மண் கடத்தலில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில்
தான் மட்டும் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பிளாட்டிற்கு மணணை கொட்டி குவித்து வருகிறார்.
இந்த நிலையில் ஏரியில் செய்தியாளர்களை அழைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பிளாட்டில் கொட்டப்பட்ட மண்ணை யாருக்கும் தெரியாமல் ஜேசிபி ஓட்டுனரை வைத்து சமன் செய்துவிட்டால் யாருக்கும் தெரியாது என்ற நோக்கிலும் ஈடுபட்டார்.
அதிகாரிகள் கேட்டால் நான் பிளாட்டுக்கு கொட்டவில்லை விவசாயத்துக்கு தான் எடுத்தேன் என்று சொல்லும் அளவிற்கு மாஸ்டர் பிளான் செய்துள்ளார். எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved