Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு செகுட்டையனார் மற்றும் அருள்மிகு சிறை மீட்ட அய்யனார், படைத்தலைவி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழாவையொட்டி புரவி எடுப்பு விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையி்ல் இந்த ஆண்டு விழா கடந்த வாரம் பாரம்பரிய குயவர்களிடம் புரவிகள் செய்ய பிடி மண் கோவில் சார்பில் வழங்கப்பட்டது.சுமார் 50க்கும் மேற்பட்ட குயவர்கள் புரவி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு புரவிகள் நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் வேண்டுகோலுக்கு இணங்க செய்து முடித்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை மாலை பிரம்மாண்ட அரண்மனை புரவிகள் 2 நேர்த்திகடன் புரவிகள் 300 என 302 புரவிகள் சாமியாட்டத்துடன் சூரக்குடி புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு பலூன், கண்ணாடி மற்றும் மாலை உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்தனர்.

அதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மு.சூரக்குடி புரவி பொட்டலில் வெள்ளி அரிவாளுடன் சாட்டையுடன் பாரம்பரிய சாமியாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் 296 புரவிகளும்,100க்கும் மேற்பட்ட மிதிலைகள் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள எஸ்.கோவில்பட்டியில் அமைந்துள்ள செகுட்டு அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக எடு்த்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
மேலும் ஒரு அரண்மனை புரவி, மறறும் 5 நேர்த்திக்கடன் புரவிகள் சிறைமீட்ட அய்யனார் கோவிலுக்கு கொண்டு சென்று நேர்த்திகடன் செலுத்தினர். கள்ளர்பட்டியில் புரவிகளுக்கு பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்தனர்.
இந்த புரவி எடுப்பு விழா இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் கேட்டவரம் தந்தருளும் அருள்மிகு செகுட்டையனார், மற்றும் சிறைமீட்ட அய்யனார் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றிய அய்யனாருக்கு மண் புரவியை தோளில் சுமந்து தங்களுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved