news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இனி வரும் காலம், மழைக்காலம்... வானிலை தகவல் என்ன?
tv

Also Watch

tv

Read this

இனி வரும் காலம், மழைக்காலம்... வானிலை தகவல் என்ன?

கனமழைக்கு வாய்ப்பு

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை ஜூன் 7ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு, கணிப்பு

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஜூன்-7 முதல் 9ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 10 முதல் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன்-7
தென்காசி
திருநெல்வேலி
கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
கன்னியாகுமரி
ஈரோடு
சேலம்
தருமபுரி
கிருஷ்ணகிரி
மதுரை
விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஜூன்-8
தென்காசி
திருநெல்வேலி
கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
திருப்பூர்
தேனி
திண்டுக்கல்
கன்னியாகுமரி
ஈரோடு
சேலம்

9ஆம் தேதி
தென்காசி
திருநெல்வேலி
கோவை
திருப்பூர்
திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதி
தேனி
கன்னியாகுமரி

10ஆம் தேதி

திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தட்ப வெப்ப நிலை
அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி
குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

சூறாவளிக்காற்று
தமிழக கடலோரப் பகுதிகள்
மன்னார் வளைகுடா
குமரிக்கடல் பகுதிகளில்
நாளை முதல் 10ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில்...
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 5 செமீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, கோவை மாவட்டம் சோலையார், சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, நெய்யூர், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, சென்னை கத்திவாக்கத்தில் தலா 3 செமீ மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Related Link
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

          



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யகுமார் யாதவின் டி-20 கேப்டன் பதவி பறிப்பு?

0
9 mins agoshare
சூர்யகுமார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved