வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும், புரட்டுமாக ஒன்றை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடினார். தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு 155 லட்சம் ஏக்கர் இருப்பதாக கூறியிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கர் உள்ளதாக கூறுவதாகவும், கடந்த ஆண்டை விட 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பதே உண்மையெனவும் அவர் குற்றம்சாட்டினார்.