மும்பை மற்றும் அகமதாபாத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கைகள் கொண்ட இரண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய லாப நோக்கமற்ற மருத்துவ சேவை வழங்கும் மயோ கிளினிக் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.