news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ரஜினியை கோபப்படுத்திய ஆதவ் அர்ஜுனா
tv

Also Watch

tv

Read this

ரஜினியை கோபப்படுத்திய ஆதவ் அர்ஜுனா

ரஜினிகாந்த் அறிக்கை

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக குடும்பத்தின் மிரட்டலால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிய விவகாரம் சூடு பிடித்து உள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, திடீரென அறிக்கை வெளியிட்டுள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காலம் பதில் சொல்லும் எனக் கூறி உள்ளார்.

ஆதரவுக் குரலுக்கு நன்றி
இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை;
தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல். திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர். என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக மிரட்டியதா?
நடிகர் ரஜினிகாந்த், திமுகவின் மிரட்டல் காரணமாகவே, அரசியலுக்கு வரவில்லை என்று, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசி இருந்தார். ஆதவ் அர்ஜூனாவின் இந்த கருத்திற்கு ரஜினி ரசிகர்கள், எதிர்க்கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சுக்கு, தற்போது கண்டனம் தெரிவித்து உள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

3
3 mins agoshare
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved