சிங்கப்பூரில் பிரபல மருத்துவமனையில் நர்சாக பணியாற்றும் இந்திய நபருக்கு, பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நீதிமன்றம் 14 மாதங்கள் சிறை தண்டனையும் இரண்டு பிரம்படியும் வழங்கி, தீர்ப்பளித்துள்ளது.சிங்கப்பூர் ரேபிள்ஸ் மருத்துவமனையில் நர்சாக இருக்கும் 34 வயதான சிவ நாகு என்பவர் அங்குள்ள கழிவறையில் வைத்து இளைஞர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த தாத்தாவை காண வந்த இளைஞரிடம், நர்ஸ் சிவ நாகு அத்துமீறியதை அடுத்து உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்ட அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.