news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அணு குண்​டு​களை தாங்கி செல்​லும் அதிநவீன ஏவு​கணை
tv

Also Watch

tv

Read this

அணு குண்​டு​களை தாங்கி செல்​லும் அதிநவீன ஏவு​கணை

வருகிறான்... ‘மினிட்​மேன்-III’ ஏவு​கணை

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Air Force successfully test

அணு குண்​டு​களை தாங்கிச் செல்​லும் திறன் கொண்ட அதி நவீன ஏவு​கணையை, அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது.

‘மினிட்​மேன்-III’ ஏவு​கணை​
கடந்த 1962ஆம் ஆண்டு, ‘மினிட்​மேன்-I’ ஏவு​கணை, கடந்த 1965ஆம் ஆண்​டில் ‘மினிட்​மேன்-II’ ஏவு​கணை​ அமெரிக்க விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டன. கடந்த 1970ஆம் ஆண்​டில் ‘மினிட்​மேன்-III’ ஏவு​கணை விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டது. இந்நிலையில், இந்த ரகத்தைச் சேர்ந்த 400 ஏவு​கணை​கள் அமெரிக்​கா​வின் மோன்​டா​னா, நார்த் டகோ​டா, வயோமிங் பகு​தி​களில் நிலை நிறுத்​தப்​பட்டு உள்​ளன. ‘மினிட்​மேன்-III’ ஏவு​கணை​யின் திறன் தொடர்ந்து மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த நிலையில், அதிவேகத்​தில், அதிக தொலைவு சீறிப் பாயும் ‘மினிட்​மேன்-III’ ஏவு​கணை​யின் சோதனை மார்ச் 3ஆம் தேதி இரவு 11.01 மணிக்கு நடத்​தப்​பட்​டதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 அணு குண்​டு​கள் வரை சுமந்து செல்ல முடி​யுமாம்
அமெரிக்​கா​வின் வாண்​டன்​பெர்க் விண்​வெளி படைத் தளத்​தில் இருந்து புறப்​பட்ட ஏவு​கணை, மார்​ஷல் தீவு​களுக்கு அருகே நிலை நிறுத்​தப்​பட்​டிருந்த 2 இலக்​கு​களை மிகத் துல்​லிய​மாக தாக்கி அழித்​தது. ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை மூலம் ஒரே நேரத்​தில் பல்​வேறு இலக்​கு​களை தனித்​தனி​யாக தாக்கி அழிக்க முடி​யும் என கூறப்படுகிறது. இந்த ஏவு​கணை முதலில் விண்​வெளி​யின் வளிமண்​டலத்தை தாண்​டிச் செல்​லும். பின்​னர் விண்​வெளி​யில் இருந்து மீண்​டும் வளிமண்​டலத்​துக்​குள் நுழைந்து, தரை​யில் உள்ள இலக்​கு​களை மிக துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும் திறன் உடையது. 36,000 கிலோ எடை, 59.5 அடி நீளம், 5.5 அடி விட்​டம் கொண்ட ஒரு ஏவு​கணை​யில் 3 அணு குண்​டு​கள் வரை சுமந்து செல்ல முடி​யுமாம்.

உற்று நோக்கும் உலக நாடுகள்
இந்த ஏவு​கணை மணிக்கு 24,000 கி.மீ. வேகத்​தில் சீறிப் பாயும். சுமார் 13,000 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். ‘மினிட்​மேன்-III’ ஏவு​கணை மூலம் உலகின் எந்த பகு​தி​யை​யும் 30 நிமிடங்​களில் தாக்கி அழிக்க முடி​யும்.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரில் ஈரான் ராணுவத்​துக்கு ரஷ்​யா​வும் சீனா​வும் மறை​முக​மாக உதவி செய்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சூழலில் ஈரான், சீனா, ரஷ்​யா​வுக்கு எச்​சரிக்கை விடும் வகை​யில் டூம்​ஸ்டே - அதாவது அழிவு நாள் ஏவு​கணை என்​றழைக்​கப்​படும் ‘மினிட்​மேன்-III’ ஏவு​கணை சோதனையை அமெரிக்​கா நடத்தியிருப்​பது உலக நாடு​கள் இடையே உற்று நோக்கப்படுகிறது.


Related Link
என் கூட யாராச்சும் சண்டைக்கு வாங்க...

என் கூட யாராச்சும் சண்டைக்கு வாங்க...

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 9 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved