news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை தகவல்

சென்னை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Weather Information

வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால், புதன்கிழமை காலை 5.30க்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறி இருப்பதாவது:

அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, இது வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா பகுதிகளைக் கடக்கக்கூடும்.

மழை நிலவரம்:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 15, 16, 17, 18, 19ஆம் தேதிகளில், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வெப்ப நிலை:
அதிகபட்ச வெப்பநிலை 30லிருந்து 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
14ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகள், வட தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளிலும்... தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40இல் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

எனவே, இந்த குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மழை நிலவரம், வெப்பநிலை:
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, மதுரை இடையப்பட்டி, கோவை சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டத்தின் நடுவட்டம், சோலையார், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டருக்கு மழை அளவு பதிவாகி இருக்கிறது.

தூத்துக்குடியில் 37 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலையாகவும், கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் கருதப்படுகிறது.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 54 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved