நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 98 புள்ளி 2 சதவீதம் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 31-ம் தேதி வரை வங்கிக்கு திரும்பிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு விவரங்களை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, தற்போது 6 ஆயிரத்து 691 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.