சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், ரிலீசுக்கு இன்னும் 50 நாட்களே இருப்பதாக குறிப்பிட்டு படக்குழு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.