இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. கான்பூரில் நடந்த முதல் நாள் போட்டியின் இடையிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி நடத்துதில் சிரமம் ஏற்பட்டது. அதில் ஓவர்கள் முழுவதும் வீசப்படாத நிலையில், வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. மேலும், மோமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகர் ரஹிம் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது கனமழை பெய்ததால் ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.