2024 மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் கோலாகலமா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.2024 மகளிர் உலக கோப்பை அக்டோபர் 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருது. இதுல 10 அணிகள் பங்கேற்று விளையாடுறாங்க. இன்னிக்கி ஐக்கிய அரபு அமீரகத்துல நடக்க இருக்குற மேட்ச்ல இந்தியா மற்றும் நியூஸ்லாந்து அணிகள் மோத இருக்காங்க. இந்திய மகளிர் அணி அதிகபட்சமா 2020 டி20 மகளிர் உலக கோப்பைல இறுதி போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலியாவ எதிர்த்து போட்டியிட்ட நிலைல தோல்விய தழுவுனாங்க. அதுக்கபுறம் 2023ல நடந்த போட்டில அரையிறுதி வரை முன்னேறி இருந்தாங்க. இப்போ இந்த 2024 மகளிர் உலக கோப்பைல கண்டிப்பா கோப்பைய கைப்பற்றனும் அப்டீன்ற முனைப்போட களமிறங்குவாங்க. கடைசியா நடந்த டி20 உலக கோப்பை பயிற்சி போட்டில தென் ஆப்ரிக்கா அணிய 28 ரன்ஙள்ல வெற்றி பெற்றது மூலமா இந்திய மகளிர் அணி நல்ல பார்ம்ல இருக்குறதா சொல்லபடுது. பேட்டிங்க பொறுத்தவரை இந்திய அணியோட ஒப்பனிக் பேட்டர்ஸ் ஆன ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷவாலி வர்மா , ஆல் ரவுண்களான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி ஷர்மா நல்ல பார்ம்ல இருகாங்க. அதே மாதிரி விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அணிக்கு பலம் சேக்குறாங்க. இந்திய அணியோட மிடில் ஆர்டர் பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் செப்டம்பர் 29ம் தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரா நடந்த பயிற்சி ஆட்டத்துல அரைசதம் விளாசுனதுனால அவங்களோட பேட்டிங் இந்த போட்டிய வெல்ல கைக்கொடுக்கும்னு சொல்லபடுது. பவுலிங்க பொறுத்தவர பூஜா வஸ்ட்ராகர் மற்றும் ரேனுகா சிங் நல்ல பார்ம்ல இருகாங்க. ஆல் ரவுண்டரான தீப்தி ஷர்மாவோட பவுலிங்கும் அணிக்கு பலம் சேர்க்கும்னு சொல்லப்படுது. இந்த மகளிர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துல நடக்குறதுனாலையும் இந்த பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமா இருக்கும்ன்றதுனலையும் இந்த மேட்ச்ல பந்துவீச்சாளர்களோட ஆதிக்கம் அதிகமா இருக்கும்னு எதிர்ப்பார்க்கபடுது.இந்திய அணியும் , நியூஸ்லாந்து அணியும் கடைசியா 2022 உலக கோப்பைக்கு அப்புறமா இந்த 2024 உலக கொப்பைல நேருக்கு நேர் சந்திக்கிறதுனால இந்த போட்டி சுவரசியமா இருக்கும்னு சொல்லப்படுது.