2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி., கதிர்ஆனந்த் ஆஜரானார்.இது தொடர்பான வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதிரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.அப்போது வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வருமானவரித்துறை சார்பில் அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, வழக்கு வரும் அக்டோபர் மாதம் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.