கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கூகுள் மேப் பார்த்து சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காயமடந்தனர். கடன பள்ளி பகுதியில் நாடகத்தை முடித்துவிட்டு புறப்பட்ட நாடகக் குழுவினர் கூகுள் மேப் உதவியுடன் சுல்தான் பத்தேரி நோக்கி மலையம்பாடி அருகே குறுகலான சாலையில் திரும்பும்போது வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.