அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்திற்குள் டிரக்கை விட்டு மோதி 15 பேர் உயிரிழக்கக் காரணமான நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். தாக்குதலில் ஈடுபட்டது டெக்சாஸை சேர்ந்த ஷம்சுத் தின் ஜப்பார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ISIS தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.