சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் ஒழுங்காக கட்சிப்பணி ஆற்றவில்லை என்றால் கதையை முடித்து விடுவேன் - ராமதாஸ் வன்னியர் சங்க மாநாட்டில் பாமகவினரை கடுமையாக திட்டித் தீர்த்த ராமதாஸ் கட்சிக்காக உழைக்காதவர்கள் MLA-வாக இருந்தாலும் கடலில் தூக்கி வீசுவேன் பாமகவினரை கடுமையாக திட்டிய நிறுவனர் ராமதாஸுக்கு சொந்தக்கட்சியினரே கடும்எதிர்ப்பு.கட்சியினரை தெம்பூட்டும் விதமாக பேசாமல் இப்படியா வசைபாடுவது? - பாமகவினர் பாமகவில் என்ன நடப்பதென தெரியாமல் பேசுவதற்கு பதில் ராமதாஸ்ஓய்வெடுக்கலாம் என பதிவு தைலாபுரத்தில் பேச வேண்டிய கட்சி விஷயங்களையெல்லாம் வன்னியர் மாநாட்டில்.ராமதாஸ் இன்னும் பேசமாட்டாரா என்ற காலம்போய் எப்போது பேசிமுடிப்பார் என்றாகிவிட்டது கூண்டில் இருக்கும் பச்சைக்கிளி போல ஆகிவிட்டார் அய்யா ராமதாஸ் - பாமகவினர்.40 ஆண்டுகளாக பின் தொடரும் வன்னியர் சங்கத்தினரை ராமதாஸ் ஏமாற்றிவிட்டதாக பதிவு ராமதாசை பின்னால் இருந்து சிலர் இயக்குவதாகவும் பாமகவினர் குற்றச்சாட்டு.அதிகமாக செலவுசெய்து கூட்டத்தை அழைத்து வந்தது வசைகளை வாங்கி செல்வதற்கா? என வேதனை.