பீகாரில் மகாகத்பந்தன் என அழைக்கப்படும் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக, எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி அறிவிக்கப்பட்டார். பாட்னாவில் நடந்த மகாகத்பந்தன் செய்தியாளர் சந்திப்பில் அவரது பெயரை, மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் அறிவித்தார். தொடர்ந்து துணை முதலமைச்சர் வேட்பாளராக, வி.ஐ.பி. கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டார். பீகாரில் இந்தியா கூட்டணிக்குள் ஏற்பட்ட தொகுதி பங்கீட்டு பிரச்சனைகளை தீர்த்து வைக்க, அசோக் கெலாட்டை காங்கிரஸ் மேலிடம் பாட்னாவுக்கு அனுப்பி வைத்தது. அங்கு லாலு பிரசாத், தேஜஸ்வி ஆகியோரை சந்தித்து பேசிய அவர், கூட்டணி கட்சிகளுக்குள் இடையே நிலவும் போட்டிக்கு தீர்வு காண்பது பற்றி விவாதித்தார்.