Also Watch
Read this
By: Web Team

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் (( Shavkat Mirziyoyev )) நேற்று பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அதோடு, இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான நெடுங்கால உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இருவரும் வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved