Also Watch
Read this
By: Web Team

உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் விழாவை சீர் குலைக்க சதி நடந்த து என்ற குற்றச்சாட்டில் மத்திய இணை அமைச்சரும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபியிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரத்தில் மிகவும் ரகசியமாக ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
திருச்சூர் பூரத்தின் போது அதன் சடங்குகளை சீர் குலைத்ததாக திருவம்பாடி தேவசம் போர்டு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பூரம் நடந்த திருச்சூர் வடக்குநாதன் கோவிலை சுற்றி வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், சுரேஷ் கோபி அங்கு ஆம்புலன்சில் வந்து இறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதிலும் சதித் திட்டம் உள்ளதாக கேரளாவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved