மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். முதலில் ஹிமாச்சல் சென்று பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர், மதியம் 1:30 மணியளவில் கங்ரா ((Kangra )) சென்று, உயர் அதிகாரிகளை சந்தித்து சூழ்நிலை குறித்து கேட்டறிகிறார். மேலும் பேரிடரில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும் பார்வையிடுகிறார்..