Also Watch
Read this
Posted on: May 23, 2025 10:21 AM
By: Srini Vasan

முன்னெப்போதும் இல்லாத வகையில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதை விரைவுபடுத்த தமது அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் டெல்லியில் நடக்கும் வடகிழக்கின் முதலீட்டாளர் மாநாட்டை துவக்கி வைத்து மோடி பேசினார்.
அப்போது இவ்வாறு கூறிய அவர், வடகிழக்கின் மாறுபட்ட அமைப்பு அதன் பெரிய பலம் என்றதுடன், நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கில் நிலவிய வெடிகுண்டு மற்றும் ஆயுத கலாச்சாரத்தால் அங்குள்ள இளைஞர்களின் பல வாய்ப்புகள் பறிபோனதாக தெரிவித்த மோடி, பத்தாயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பத்தாண்டுகளில் அங்கு வன்முறையை கைவிட்டதாகவும் கூறினார்.
நக்சலைட்டுகள் அல்லது பயங்கரவாதிகளை தமது அரசு ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved