Also Watch
Read this
Posted on: Nov 23, 2025 09:49 AM
By: Web Team

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ((BCCI)) மும்பையில் தேர்வுக் குழு கூட்டத்தை இன்று நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் அணியின் கேப்டனை தேர்வு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. காயம் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து சுப்மன் கில் விலகியுள்ள நிலையில், கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved