இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிக்கும் இந்தி மொழி நண்பன் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய அரசின் அலுவலக மொழித்துறையின் 50வது ஆண்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவின் எந்தவொரு மொழிக்கும் இந்தி எதிராக இருக்க முடியாது என்று நம்புவதாகவும், எந்தவொரு மொழிக்கும் எதிர்ப்பு இருக்க கூடாது என்றும் கூறினார். ஒருவர் சொந்த மொழியைப் போற்றுவதற்கான, பேசுவதற்கான மற்றும் சிந்திப்பதற்கான உந்துதல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதும், அவற்றை வளப்படுத்துவம் முக்கியம் என்று அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : "ஆப்பரேஷன் பிகாலி" நடவடிக்கையில் தீவிரவாதி சுட்டுக்கொலை