நிலக்கரி சுரங்க வெடி விபத்து : மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. Related Link காலனி ஆதிக்க பெயர்கள் மாற்ற ராணுவம் நடவடிக்கை