Also Watch
Read this
By: Web Team

திபெத்திய புத்த மத தலைவரான அடுத்த தலாய் லாமா யார் என்பது குறித்த சர்ச்சைக்கு இடையே தாம் 130 வயது வரை வாழப் போவதாக இப்போதைய 14 ஆவது தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
முன்னதாக அடுத்த தலாய் லாமாவை நியமிக்கப் போவதில்லை எனவும் தாமே இறந்து மறு பிறவியாக வருவேன் எனவும் அவர் கூறினார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அடுத்த தலாய் லாமா, நூற்றாண்டு மரபுகளின் படி சீனாவில் வைத்து தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தலாய் லாமாவின் 90 ஆவது பிறந்த நாளை ஒட்டி தரம்சாலாவில் நடந்த நிகழ்ச்சியில் தமது சீடர்களிடம் பேசிய தலாய் லாமா, இன்னும் 40 ஆண்டுகள் வாழ்வேன் என்றார்.
கடந்த டிசம்பரில் தாம் 110 வயது வரை வாழ்வேன் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved