news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பண்டிகை கால சலுகை- ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி..
tv

Also Watch

tv

Read this

பண்டிகை கால சலுகை- ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி..

பண்டிகை கால சலுகை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

பண்டிகை கால சலுகையாக ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடியை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் வரை தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் ரயில்வே அமைச்சகம் பயணிகளின் சுமையை குறைக்கும் வகையில் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திரும்பி வருவதற்கான டிக்கெட் விலையில் 20 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது.

அக்டோபர் 13 முதல் 26 ஆம் தேதி வரை ஒரு வழி பயணம் மேற்கொள்பவர்கள், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை அதே ரயில்களில் திரும்புவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், திரும்பும் பயணத்துக்கான கட்டணத்தில் 20 சதவீத சலுகை பெறலாம். இதில் ஒரே நேரத்தில் புறப்பாடு மற்றும் திரும்பி வருவதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.

இரு பயணத்திலும் பயணிகளின் வகுப்பு, புறப்படும்-சேரும் இடங்கள் என அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 44 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved