புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு திரும்ப வேண்டும் : நாடு முழுவதும் எரிசக்தி பொருட்களின் ஒட்டுமொத்த விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இத்தகைய சவால்களை எதிர் கொண்டு வருவதாகவும் மத்திய வேளாண்மைத் துறை ஆணையர் பி.கே.சிங் கூறினார். நீண்ட கால எரிசக்தி பயன்பாட்டுக்கு அனைவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். Related Link நாடு தழுவிய அளவில் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு