குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் தையல் கடைக்கு 89 லட்சம் ரூபாய் மாத மின் கட்டணம் வந்ததை கண்டு அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். எப்போதும் 2 ஆயிரம் ரூபாய்க்குள் மின் கட்டணம் வரும் நிலையில், இம்முறை கடையின் மொத்த மதிப்பை விட அதிகம் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்ததில், மீட்டர் மூலம் கணக்கெடுத்த போது தவறான யூனிட்டை பதிவிட்டதால் கூடுதல் தொகை வந்தது தெரிந்தது.