Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 02:43 PM
By: Web Team

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை தொடர்ந்து நிலை நிறுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறினார். வரலாற்று சிறப்புமிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அண்ணல் அம்பேத்கர் மேற்கொண்ட உழைப்பையும், முயற்சிகளையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் முழுமனதோடு ஏற்றுக் கொண்டதாகவும் குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved