Also Watch
Read this
By: Web Team

ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ICUவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் இருந்த நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென தீ பரவி புகை மூட்டம் எழும்பியதால் நோயாளிகள் மூச்சுதிணறலுக்கு ஆளாகினர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் நோயாளிகளை மீட்டு,வேறு இடத்திற்கு மாற்றினர்.
இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றம் நிலையில், ICUவில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் எரிந்தும் சேதமானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved