தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி, அதாவது வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.