கம்ப்யூட்டர்களின் அடுத்த தலைமுறையாக குவாண்டம் கம்ப்யூட்டிங் இருக்கும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.சென்னை தரமணியில் உள்ள IIT ஆராய்ச்சி பூங்காவில் "குவாண்டம் மிஷன்" குறித்த சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஐஐடி இயக்குனர், துல்லியமான தகவல்களை நமக்கு வழங்கும் வகையில் குவாண்டம் கம்ப்யூட்டிங் செயல்பட போவதாகவும், அதற்கான ஹார்டுவேர்கள் 4 முதல் 5 ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.