Also Watch
Read this
Posted on: Sep 01, 2024 09:40 AM
By: Srini Vasan

தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் புகுந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பெருக்கு காரணமாக மஹபூபாபாத் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கி காட்சியளிக்கிறது. இதனால் விஜயவாடாவில் இருந்து வாரங்கல், வாரங்கலில் இருந்து விஜயவாடா மற்றும் டெல்லியில் இருந்து விஜயவாடா செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved