என்ன தான் போலீசாரின் தொடர் கண்டிப்புக்கு ஆளானாலும் திருந்தாத சில இளைஞர்கள் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டி ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை தொடர்கதையாக செய்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் இளைஞர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் சினிமா பாடலுக்கு ஏற்ற வகையில் ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.