திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கைகளை விட்டுவிட்டு பைக்கின் இருக்கை முனையில் அமர்ந்து, ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.