காதலர் தினத்தில் காதலியை பார்க்க வேண்டும் எனக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை போலீசார் காரில் அழைத்து வந்த பிறகே இளைஞர் கீழே இறங்கினார்.