திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேல் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவெடி சரத் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.