Also Watch
Read this
By: Fyrose Banu

குழந்தைகள் கையால் ரிப்பன் வெட்ட வைத்து, 5 முக குத்துவிளக்கேற்றி திறக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையம்; குழந்தைகள் கையால் குத்துவிளக்கேற்ற வைத்து கைத்தட்டி ரசித்த சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ செய்த நெகிழ்ச்சி செயலால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


குழந்தைகளால் ஏற்றப்பட்ட குத்துவிளக்கு
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துரைப்பாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் மேம்பட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டார். அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க வருகை தந்த எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்த் ரமேஷ் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் கையால் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து உள்ளே குத்துவிளக்கேற்ற எம்.எல்.ஏ., கையில் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி கொடுத்த நிலையில் ஐந்து முக குத்துவிளக்கை அங்கன்வாடி குழந்தைகள் அனைவராலும் ஏற்றப்பட்டு கைத்தட்டி மகிழ்ந்தார்.

நெகிழ்ச்சியடைய செய்த எம்.எல்.ஏ
எம்.எல்.ஏ கையால் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி அங்கன்வாடி மையத்தை திறக்க சொன்ன நிலையில் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள் கையால் ரிப்பன் வெட்டி, அணைத்து குழந்தைகள் கையாலும் குத்துவிலக்கேற்ற வைத்த சம்பவம் அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved